
In this video i give information about me and also awareness about why do we learn English typing. Today is the computer world. Most of them use computers even kids also learn how to use the computer but they dont know how to use the computer keyboard proper way, Here before i taught lesson in my students in our area people. Now i plan to come an online and teach to worldwide. That is why i come to upload this lesson in udemy. I have 20 years experience in computer education field. 3 more years experiences in youtube. I plan to upload 40 more software courses in udemy. Please support me to upload more courses in udemy. Now i upload this course in tamil version. very soon i upload english version too.
Sentence practice pdf file Attached in this lesson. Please check it
வணக்கம்,
தற்பொழது அனைவரும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறோம். ஆனால் பெரும்பாலோருக்கு எப்படி கம்ப்யூட்டர் கீபோர்ட் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவது இல்லை. அவரவர்கள் தங்களுக்கு ஏற்றப்படி ஏதாவது வழியை பின்பற்றி டைப் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த கோர்ஸ்யில் உங்களுக்கு முறையாக இங்கலிஷ் டைப்பிங் எப்படி கற்று கொள்வது என சொல்லி தரப்பட்டு இருக்கிறது. நான் கம்ப்யூட்டர் பயிற்சியோடு, டைப் பயிற்சி மையமும் எங்கள் ஊரில் நடத்தி கொண்டு இருப்பதால் என்னிடம் பயின்ற பல மாணவர்கள் டைப் ரைட்டிங் பயிற்சி பயின்று அரசாங்க சான்றிதழ் பெற்று பயடைந்துள்ளனர். இந்த பயிற்சியை நீங்கள் உங்கள் வீட்டிலேயோ அல்லது அலுவலகத்திலேயோ தினமும் 30 நிமிடங்கள் நாள் ஒன்றுக்கு செலவிட்டால் போதுமானது. 15 நாட்களிலேயே தாங்கள் கம்ப்யூட்டர் கீ போர்ட் பயன்படுத்துவதில் வல்லவராக திகழ்வீர்கள் என்று உறுதியுடன் கூற முடியும்.
இந்த பயிற்சி தமிழ் வழியில் கற்றுத் தரப்பட்டுள்ளது. தாய்மொழியில் எந்த கல்வியையும் கற்கும்பொழதும் எளிதாக கற்றுக் கொள்ள முடியும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. அதற்காகவே இந்த பயிற்சி நமது தாய்மொழி தமிழில் வழங்கப்பட்டுள்ளது. ஆங்கில வழியில் கற்க விரும்புகிறவர்களுக்காக தனிக் கோர்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில வழியில் இங்கிலீஷ் டைப்பிங் பயிற்சி கற்க விரும்புகிறவர்கள் அதனை தேர்ந்தெடுத்து பார்த்து படித்து பயனடையுங்கள்.
இந்த பயிற்சியில் நான் இங்கிலீஷ் டைப் ரைட்டிங் மட்டும் சொல்லித்தரவில்லை, கம்ப்யூட்டர் கீபோர்ட் பற்றிய விளக்கங்களையும் அதனுடைய செயல்பாடுகளையும் விவரித்துள்ளேன். ஏனெனில் கீபோர்ட் பற்றிய தெரிதல் இருந்தால் மட்டுமே நாம் கம்ப்யூட்டர் கீபோர்டை தன்னம்பிக்கையுடன் பணியாற்றமுடியும் என்று அதைப் பற்றியும் விவரித்துள்ளேன்.
அடுத்தடுத்த பயிற்சிகளுக்கு உடனே சென்று விடவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். முதல் பாடம் பார்த்தவுடன் உங்கள் கம்ப்யூட்டரில் முதலில் நான் கூறியப்படி பயிற்சியை மேற்க்கொள்ளுங்கள். அந்த பயிற்சியை முடித்த பிறகே அடுத்த பாடத்திற்கு தாங்கள் செல்லவேண்டும். அப்பொழதுதான் முழுமையான பயிற்சியாக இருக்கும். அதை விடுத்து தாங்கள் அடுத்தடுத்த பயிற்சியை பார்த்திர்கள் என்றால் உங்களுக்கு இந்த பயிற்சி பாடம் பயனளிக்காது. எனவே இந்த கோர்ஸ்ஸில் பயிற்சிதான் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த கோர்ஸ்ஸில் 27 பாடங்களும் மற்றும் 3 பிடிஎஃப் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி உங்களுக்கு மட்டுமல்லாது உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும் பயன்பட கூடிய ஒன்று. எங்கள் இந்த பயிற்சி பயனுடையதாக இருப்பதாக கருதினால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த பயிற்சியை வாங்கி பயடைய செய்யுங்கள்
கடைசியாக, பயிற்சி மட்டுமே ஒரு மனிதனை முழுமையானவனாக மாற்றும். அதனால் கற்றலோடு நில்லாமல் பயிற்சி மேற்கொள்ளுங்கள் உங்கள் வேலைவாய்ப்பிற்கும், அலுவலக பணிகளுக்கும் இந்த பயிற்சி பயனளிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
நன்றி
வாழ்த்துக்களுடன்,
க. சிவா
யுடிமி பயிற்சியாளர்