
இயற்க்கை விவசாயத்தை பற்றிய ஒரு தெளிவான விளக்கம்.
இதில் இயற்க்கை எவ்வாரு செயல்படுகிறது என்று பார்க்கப்போகிறோம். இயற்க்கை விவசாயத்தின் நான்கு படிநிலைகள்.
விதை தேர்வு மற்றும் விதை நேர்த்தி செய்தல். பயிர் வளர்ச்சி ஊக்கி(நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறை). மூடாக்கு களை கட்டுபடுத்த ஒரு சிறந்த கருவியாக செயல் படுகிறது. vaapsaa முக்கியத்தை அறிவைத்தான் மூலம் பயிர்க்கு தேவையான சூழ்நிலையை உர்வாக்கமுடியும். இந்த இயற்க்கை விவசாயத்திற்கு மிகமிக முக்கியமான ஒன்று "புனித பசு" அல்லது "புனித பசு" என்று அடிக்கடி குறிப்பிடப்படும் இந்திய மாடு, இந்திய கலாச்சாரம் மற்றும் சமூகத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. இது எளிய மற்றும் நேரடியான முறையில் பல நன்மைகளை வழங்குகிறது:
சாணம் எருவாக: பசுவின் சாணம் கரிம உரத்தின் மதிப்புமிக்க ஆதாரமாகும். இது பயிர்களுக்கு உரமிடவும், மண் வளத்தை அதிகரிக்கவும், ஆரோக்கியமான, அதிக உற்பத்தி விவசாயத்தை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது.
இதன் பயன் : மகசூல் அதிகரிக்கும், நீர் தேவை குறையும், களைகள் கட்டுபடுத்தமுடியும், குறைந்த ஆட்கள்தேவை, பூச்சி கட்டுபடுத்தபடும்.
இன்றைய விவசாயிகள் உபயோகிக்கும் கெமிக்கல் உரம் நிலத்தின் வளத்தை குறைக்கின்றது. நிலம் உப்பாக மாறுகின்றது. நாம் உபயோகிக்கும் கெமிக்கல் நிலத்தில் அப்பாடியே இருக்கும். மழை காலத்தில் அதிக மாலை நீரில் நிலத்தில் உள்ள ஊறிய உரத்தின் கரையாத பகுதிகளும் அடித்துச்செல்லும். இது ஒரு நிலத்தில் இருந்து மற்றொரு நிலத்துக்கு சென்று பின் ஏரி, குலம், குட்டை, ஆறு பின் கடலை சென்றடையும் (முக்கியமாக சொன்னால் கிணற்றிலும், நிலத்தின் நீர் ஆதாரத்திலும் சென்றடையும். பின் நாம் அதை குடிப்பாதல் உடல் உபத்தை வருவதற்கான வாய்ப்பு அதிகம்). இதை சரிசெய்ய நாம் இயற்க்கை விவசாய முறைக்கு மாறியே ஆகவேண்டும். ஓரிரு வருடத்தில் பெரிய மாற்றத்தை பார்க்கமுடியும். மண்ணில் உள்ள நுண்ணுயிரி மண்ணின் தன்மையெய் மாற்றிவிடும். இது சுற்றுச்சூழலுடன் இணக்கமான ஒரு விவசாய அணுகுமுறையாகும். இது குறைந்தபட்ச மனித தலையீடு மற்றும் பயிர்களை பயிரிடுவதற்கும் கால்நடைகளை வளர்ப்பதற்கும் இயற்கை செயல்முறைகளைப் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது.